மத்திய இணை அமைச்சராகும் ரவீந்திரநாத் குமார் – டெல்லியில் இருந்து அழைப்பு!

254

துணை முதல்வர் ஓ.பிஸ் மகன் ரவீந்திரநாத் குமார் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக 38 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், தேனி தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத்குமார் மட்டுமே வெற்றி பெற்றார்.  எனவே, அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என அதிமுக தரப்பில் இருந்து பாஜக தலைமைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

பிரதமர் மோடி நாளை பதவியேற்கவுள்ளார். எனவே, அமைச்சரவை பட்டியலை கடந்து 3 நாட்களாக தயாரித்து வந்தனர். இந்நிலையில், ரவீந்திரநாத் குமாருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  பிரதமராக மீண்டும் தேர்வு - 30ம் தேதி பதவி ஏற்கும் மோடி