நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்கு பல முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 350 இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வருகிற 30ம் தேதி அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார். 30ம் தேதி மாலை 7 மணியளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அவரோடு மந்திரிகளும் பதவி ஏற்கவுள்ளனர்.
இந்நிலையில், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தர்பார் படப்பிடிப்பிற்காக மும்பை செல்லும் ரஜினி, அங்கிருந்து டெல்லி சென்று இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். ஆனால், இந்த விழாவில் கலந்து கொள்வது பற்றி முடிவெடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.