டி.ராஜேந்தர் இயக்குனராக அறிமுகமானவர். பன்முகத் தன்மை கொண்டவர். இசையமைப்பாளர், கதாநாயகன், தயாரிப்பாளர், வசனகர்த்தா, எடிட்டர் என எல்லா துறைகளிலும் தடம் பதித்து சாதித்துக் காட்டியவர்.
தன்னுடைய அடுக்குமொழி வசனங்களாலும், தமிழ் மொழி மீது கொண்டிருந்த பற்றையும், தமிழ் மொழியினுடைய சிறப்பையும் தனது படங்களில் காட்டியிருப்பார் ராஜேந்தர்.
இவரது காதல் பாடல்களை எப்பொழுது கேட்டாலும் இனிமையாகவும், காதலர்கள் தங்களை மறந்து கற்பனையில் மிதக்கும் விதமாகத்தான் வழங்கியிருந்தார்.இவரது படங்களில் சென்டிமெண்ட் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது.
டி.ராஜேந்தருடனான தனது அனுபவத்தை சந்தானம் ஒரு பேட்டியில் சொல்லும் பொழுது அவர் மிகவும் உணர்ச்சிகரமானவர் என்றார். ஒரு காட்சி எப்படி அமைய வேண்டும் என்பதை அந்த படத்தினுடைய குழுவிற்கு நடித்துக் காட்டுவாராம்.

ஒரு படத்தில் காட்சி அமைப்பு குறித்து விளக்கிக் கொண்டிருக்கும் போது நீச்சல் குளத்தில் குதித்து நீந்தி ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு செல்வது போல காட்சி. கதாநாயகன், கதாநாயகி இருவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கதாநாயகனுக்கு காட்சி பற்றி விளக்கியிருக்கிறார்.
டி.ராஜேந்தர் சொல்லியதை சரியாக உள்வாங்காமல் திருதிருவென முழித்திருத்துகிறார் கதாநாயகன். உடனே கோபத்தில் நீச்சல் குளத்துக்குள் குபீரென குத்தித்துவிட்டாராம். நாயகன் இருந்த இடம் வரை நீந்தியே போயிருக்கிறார். இப்படித்தான் நடிக்கனும் நீ என்ன கவனிக்கிற, என்று சொல்லி ஹீரோவை பளார்,பளார் என அரை விட்டாராம்.
ஒரு பக்கம் அதிர்ந்து போய் நின்ற சந்தானம் மறுபுறம் டி.ராஜேந்தரின் அர்ப்பனிப்பை பார்த்து அசந்து போயிருக்கிறார். ராஜேந்தரின் மகனான சிம்புவுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார் சந்தானம்.