cinema news
நயன்தாராவை வேண்டாம் என ரிஜெக்ட் பண்ணிய பார்த்திபன்,மாதவனை பார்த்து பாய்ந்த அலை!…
‘லேடி – சூப்பர் ஸ்டார்’ ஆக தமிழ் சினிமாவை கலக்கி வரும் நயன்தாரா, பார்த்திபன் படம் ஒன்றில் நடிக்க பேசப்பட்டிருந்தார். “குடைக்குள் மழை” படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக ஆக்குவதாக திட்டமிட்டு இருந்தார் பார்த்திபன்.
ஷூட்டிங்கிற்கு அவர் வர தாமதித்து இருக்கிறார். அந்த கோபத்தில் நயனுக்கு பதில் மதுமிதாவை வைத்து படத்தை எடுத்து ரிலீஸ் செய்து விட்டார் பார்த்திபன்.
இதேபோல “அலைபாயுதே” படத்தில் முதலில் நடிக்க பேசப்பட்டு, ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கார்த்திக். அதே படத்தில் கூட அவர் நடித்திருந்திருப்பார்.
தற்பொழுது ஸ்டேண்டப் காமெடியனாக தன்னை மாற்றிக் கொண்டுள்ள கார்த்திகை, அந்த நேரத்தில் திடீரென தவிர்த்து விட்டு மணிரத்னம் மாதவனை நடிக்க அழைத்தாராம். மாதவனும் இப்பொழுது தமிழ் திரை உலகில் பெரிய அளவில் படங்களில் நடிப்பதில்லை. அதேபோல கார்த்திக்கும் அதிகு வாய்ப்பும் கிடைக்கவில்லை.
விக்ரமின் வாழ்க்கையை புரட்டி போட்ட படம் “சேது”. ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக பல ஆண்டுகளாக இலவு காத்த கிளி போல காத்திருந்தார் விக்ரம்.இன்று ‘சீயான்’விக்ரம் என்று சொன்னால்தான் பலருக்கு தெரியும் என்ற நிலையை உருவாக்கியது பாலா இயக்கிய “சேது” படம்.
முதலில் இந்த படத்தை நடிகர் விக்னேஷ் வைத்து தான் எடுப்பதாக பாலா திட்டமிட்டு இருந்தார். அந்த நேரத்தில் விக்னேஷ் வேறு ஒரு படத்தில் நடித்திருந்தாலும், அவரது கால்ஷீட் கிடைக்காததால் விக்ரமிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒருவேளை அந்தப் படத்தில் விக்னேஷ் நடித்திருந்தால் ‘சியான்’ விக்னேஷ் என சொல்ல வேண்டிய நிலை வந்திருக்குமோ? என சிந்திக்க தோணுகிறது…