என் வெற்றிக்கு வன்னியர்களின் ஓட்டுகளும் காரணம் – திருமா ஓப்பன் டாக்

195
என் வெற்றிக்கு வன்னியர்களின் ஓட்டுகளும் காரணம் - திருமா ஓப்பன் டாக்

மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற திருமாவளவன் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

என் வெற்றிக்கு வன்னியர்களின் ஓட்டுகளும் காரணம் - திருமா ஓப்பன் டாக் 01

திமுகவுடன் கூட்டணி அமைத்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் இழுபறிக்கு நடுவில் வெற்றி பெற்றார்.  சமீபத்தில் அவர் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

அதன்பின் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய திருமா ‘ வன்னிய சமூகத்தினருக்கு என்னை எதிரி போல் சிலர் சித்தரித்து வந்தனர். ஆனால், அவர்களின் பிரச்சாரம் இந்த தேர்தல் வெற்றி மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. பிற சமூக மக்களோடு வன்னியர் சமூக மக்களும் எனக்கு மனமுவந்து வாக்களித்ததன் விளைவாகவே நான் வெற்றி பெற்றேன்’ என தெரிவித்தார்.

பாருங்க:  LIC ரத்து செய்யவுள்ள பிரபலமான சில காப்பீடு திட்டங்கள்!