Connect with us

பாஜகவில் சசிகலா சேருகிறாரா?

Latest News

பாஜகவில் சசிகலா சேருகிறாரா?

அதிமுக கட்சியில் செல்வாக்கு மிக்கவராக விளங்கியவர் சசிகலா. இவர் முன்னாள் முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தபோது அவரது உடன்பிறவாத்தோழி என்று அவரோடு உடன் இருந்தவர்.

ஒருவருக்கு எம்.எல்.ஏ சீட், எம்பி சீட் போன்றவை சசிகலாவின் ஆதரவு பெற்றவர்களுக்கே சென்றது. அது போல ஒருவரை பிடிக்கவில்லை என்று நீக்கினாலும் அதுவும் சசிகலாவின் சொல்படியே கேட்டு ஜெ செய்தார் என்று சொல்லப்பட்டதுண்டு.

அப்படிப்பட்ட சசிகலாவுக்கு ஜெ மறைந்த பிறகு சோதனை காலமானது. எல்லோரும் ஒன்று சேர்ந்து அவரை எதிர்க்க, அந்த நேரத்தில் ஊழல் வழக்கின் தீர்ப்பும் வர சசிகலா ஜெயிலுக்கு செல்ல நேரிட்டது.

3 வருட தண்டனை காலம் முடிந்து கடந்த ஆண்டு சசிகலா ரிலீஸானார். இந்த நிலையில் அவரது ஆதரவாளர்களோடு அதற்கு முன்பே அமமுக கட்சியும் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த வருடம் அதிமுக தோல்விக்கு அமமுகவும் ஒரு முக்கிய காரணம் ஆகும். அதிமுகவின் ஓட்டுக்களில் பாதியான அமமுகவின் ஓட்டுக்கள் அவர்களுக்கும் பயன்படாமல் அதிமுகவுக்கும் பயன்படாமல் போனது.அதனால் திமுக வென்றது

இந்த சூழ்நிலையில் தற்போது அதிமுகவில் அவரை இணைக்கவும் மறுக்கின்றனர். இதனால் அவர் பாஜகவில் சேர்வார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, சசிகலாவை ஏற்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்  என கூறி உள்ளார்.

மேலும் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கூறும்போது அதிமுகவில் சசிகலாவை சேர்த்துவிட்டால் அக்கட்சி இன்னும் வலுவாக இருக்கும். பாஜகவுக்கு அவர் வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அவரது வருகை பாஜகவினருக்கு உறுதுணையாக இருக்கும். அவரை அதிமுகவில் சேர்க்காவிட்டால், பாஜகவில் இணைப்பதற்கான பணிகளை நாங்கள் முன்னெடுப்போம்” என்றார். பேட்டியின்போது, சசிகலாவின் பெயரைச் சொல்லாமல் சின்னம்மா என்று நயினார் நாகேந்திரன் கூறியது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  நன்றி கொடுகா- விஷால் தந்தையின் மகிழ்ச்சி

More in Latest News

To Top