Latest News
வெற்று உரை தேவையில்லை- ராகுல் காந்தி கடும் தாக்கு
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது இது போன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைகளுக்கு கொரோனா மட்டும் காரணம் இல்லை மத்திய அரசின் மக்கள் எதிர்ப்பு கொள்கைகள்தான் காரணம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது, தன்னை ராகுல் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், தொடர்ச்சியாக வருத்தம் தரும் செய்திகளே கொரோனா குறித்து வந்து கொண்டு இருப்பதாகவும் கூறி உள்ளார். போலி கொண்டாட்டங்களும், வெற்று உரைகளும் தேவையில்லை என்றும், தீர்வை மட்டும் தாருங்கள் என்றும் அவர் கடுமையாக கருத்து தெரிவித்து உள்ளார்.
