இளையராஜா ஒருபுறம் தனது மெட்டுக்களால் மகிழ்விக்க, ஏ.ஆர்.ரகுமான் நவீன மயமான கருவிகளோடு மக்கள் மனதை கொள்ளையடித்து கொண்டிருந்தார்.இடையிடையே எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி இவர்களும் தங்களது கானமழையை பொழிந்து வந்த நேரம் தான் அது.
இவர்கள் எல்லோரின் மத்தியில் தனக்கென ஒரு தனி வழியை தேந்தெடுத்து அதில் பயனித்து வெற்றி கண்டவர் தேவா. தேனிசைத்தென்றல் என பட்டம் வழங்கப்பட்டு ரசிக பெருமக்களின் அன்பினை பெற்று வந்தவர் இவர்.

எத்தனை இசையமைப்பாளர்கள் ரஜினிகாந்திற்கு இசையமைத்திருந்தாலும் இன்றும் ரஜினியின் பெயர் திரையில் வரும் டைட்டில் கார்டின் இசை தேவா இசையமைத்தது தான். “அண்ணாமலை” படத்தில் தேவா போட்ட டியூன் தான் அது.
தேவா தனது வாழ்வில் நடந்த சுவாரசிய சம்பவம் ஒன்றினை பகிர்ந்திருந்தார். திரைஉலகில் சிறிது பிரபலமான பிறகு சொந்தமாக ஒரு காரினை தேவா வாங்கியிருக்கிறார். செகன்ட்ஸாக வாங்கப்பட்ட கார் தானாம் அது. அதனை ஓட்டுவதற்கு டிரைவர் ஒருவரை பணியில் அமர்த்தியிருக்கிறார்.
ஒரு நாள் காலையில் தனது வேலைக்காக காரில் ஏறத்தயாராக இருந்திருக்கிறார் தேவா. அவரை பார்த்த டிரைவரோ மணி என்ன ஆச்சு இப்போ ஏழு மணிக்கு நீங்கள் அங்கே இருக்க வேண்டும் ஆனால் நாம் இப்பொழுது தான் இங்கிருந்தே கிளம்புகிறோம் என கண்டிப்புடன் சொல்ல தேவாவோ அதிச்சியில் உறைந்து நின்றிருக்கிறார்.
அதே போல ரிக்கார்டிங் செய்யப்பட்ட பாடல்களை பயனத்தின்போது கேட்கும் பழக்கம் தேவாவிடமிருந்ததாம். அப்படி அவர் பாடல்களை கேட்கும் போது டிரைவர் காரில் உள்ள டேப் ரிக்கார்டரை அனைத்துவிடுவாராம். இதை பற்றி கேட்டதற்கு எனக்கு பிடிக்கவில்லை என தைரியமாக சொல்லிவிடுவாராம். தனது பனியாளராக இருந்தாலும் தேவா அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையும், மரியாதையும் தான் ஓட்டுனருக்கும் அத்தனை உரிமை கொடுக்க வைத்ததாம்.