Entertainment
தீயவை நடக்கும் இடத்தில் கண்ணன் ஆக அவதாரம் எடுப்பேன் – சீமான்
அநியாயம் நடக்கும் இடத்தில் எல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என கீதையில் பகவான் கண்ணன் கூறியுள்ளார். ஆனால் காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இது போல் பேசியுள்ளது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன், மாயோனின் வழி வந்தவன் என்ற வகையில் பேசிய சீமான், எங்கெங்கு அநியாயங்கள் நடக்கிறதோ அங்கே நான் அவதாரம் எடுப்பேன் என கூறியுள்ளார்.
இதற்கு முன் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சீமான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மிக இழிவாகவும் மோசமாகவும் பேசியவர், கிருஷ்ணர் ஆடை திருடும் சம்பவத்தை மிக மிக மோசமாக பேசியவர் அந்த காணொளிகள் இணையத்தை சுற்றி வருகின்றன.
இதனால் சீமான் எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஏய்யா இப்படி பேசிட்டு கிருஷ்ண அவதாரம் எடுப்பியா என சீமானை ட்ரோல் செய்து வருகின்றனர்.