cinema news
கல்லா காலியானதே கமல்ஹாசனால தான்… வேதனையில் பிரபல இயக்குனர்…
“சண்டக்கோழி”, “ரன்” போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் லிங்குசாமி. தொட்டதெல்லாம் ஹிட் எனயிருந்த இவருக்கு அஜித்குமாரை வைத்து இயக்கிய “ஜீ” படம் பெரிய அளவிலான ஏமாற்றத்தை தந்தது.
கார்த்தி நடித்த “பையா”, ஆர்யா, மாதவன் நடித்த “சேட்டை” படங்களே தற்பொழுது வரையிலான இவரது வெற்றி படங்கள்.
இயக்குனராக இருந்தவர் தயாரிப்பாளராகவும் மாறினார் லிங்குசாமி. கமல்ஹாசனை வைத்து “உத்தம வில்லன்” படத்தின் தயாரிப்பாளர் இவரே தான்.
அந்தப் படத்தில் தனக்கு ஏற்பட்ட பெரிய நஷ்டம் தான் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையை முன்னுக்கு பின் முரணாக மாற்றியது என சொல்லியிருந்தார்.
கமல் முதலில் “நாயகன்” பட வேலு நாயக்கர் போல ஒரு கதையை தயார் செய்து வைத்திருப்பாதாக பேச்சுவார்த்தையின் சொன்னார். பிரச்சனையில் சிக்கிக்கொண்ட தனது சகோதரனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதையாம்.
தம்பி கேரக்டருக்கு சித்தார்த்தை அணுகலாம் என முடிவுசெய்யப்பட்டதாம். அதை செயல்படுத்த வேண்டிய நேரத்தில் கதையை அப்படியே மாற்றி விட்டாராம் கமல். லிங்குசாமி எதிர்பார்த்து ஒன்று, நடந்தது ஒன்றாகிப்போனதாம்.
“தேவர்மகன்”, “அபூர்வ சகோதரர்கள்” மாதிரி படம் கிடைக்கும் என நினைத்திருக்கிறார், ஆனால் தான் நினைத்தபடியே தான் எல்லாம் நடக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்த கமல் “உத்தமவில்லன்” படத்தை எடுத்த முடித்து விட்டார். இப்படி ஒரு நஷ்டம் ஏற்படும் என்பதை கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என சொல்லியிருப்பார்.
கமல்ஹாசன் தனக்கு மிகவும் பிடித்தமான கலைஞன் அவர் மீது தனக்கு மிகுந்த மரியாதை எப்போதும் உண்டு என்றும் லிங்குசாமி குறிப்பிட்டிருந்தார்.