Latest News
நீங்க எல்லாம் புத்தி சொல்றிங்களா- தாலிபன் அரசை கண்டிக்கும் இந்திய நெட்டிசன்ஸ்
சமீபத்தில் கியான் வாபி மசூதி சம்பந்தமான டிவி விவாதத்தில் பேசிய பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் மதகுருவான அவர்கள் புனிதமாக நினைக்க கூடிய முகமது நபி பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அனைத்தும் கண்டனம் தெரிவித்தது.இதை ஏற்றுக்கொண்ட இந்திய அரசு நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று இது இந்தியாவின் கருத்து இல்லை, தனிப்பட்ட நபர்களின் கருத்து அவர்களின் கட்சி சம்பந்தமான பதவியும் பறிக்கப்பட்டுவிட்டது எனவும் விளக்கம் கொடுத்தது.
எனினும் இந்தியாவை தொடர்ந்து இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு சாடி வருகிறது.இதற்கு இந்தியா வெளியுறவு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டது.
இருப்பினும் பெண்களுக்கு கல்வியை மறுக்கும், மக்களின் அடிப்படை சுதந்திரம் அனைத்தையும் மறுக்கும் தாலிபான்களும் இந்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர்கள் அந்த நாட்டு மக்களை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
இதற்கு இந்திய நெட்டிசன்கள் சரமாரியாக பதிலடி கொடுத்து வருகின்றனர். நீங்க எல்லாம் எங்களுக்கு புத்தி சொல்றிங்களா என்ற வகையில் சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளனர்.