cinema news
ஆளை விடுங்கப்பா…அமெரிக்காவிற்கு பறக்க தயாராகி வரும் கமல்?…
“இந்தியன் – 2″வை தீபாவளி பண்டிகையை போல உற்சாகமாக கொண்டாடலாம் என நினைத்த தமிழ் ரசிகர்களுக்கு கடைசியில் அது தீபாவளிக்கு விடும் புஸ்வானமாக மாறி அதிர்ச்சி கொடுத்து விட்டது. ஷங்கர் இயக்கிய படங்கள் எதுவும் இதுவரை வணிக ரீதியான தோல்வியை சந்திததே இல்லை என்ற வரலாற்றுச் சாதனையை முறியடித்துள்ளது “இந்தியன் – 2”, ஷங்கர் – கமல் காம்போ அதிகம் எதிர்பார்க்கப்பட்டது நேரத்தில்.
படத்தின் நீளம் தான் தோல்விக்கு காரணம் என நினைக்கப்பட்டதால் பதினைந்து நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் படம் எப்படி இதுவரை வாங்கிய நெகட்டிவ் விமர்சனகளிலிருந்து மீண்டு வரும் என்பது இப்போது வரை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
ஷங்கர் தனது வாழ்நாளில் இனி இப்படிப்பட்ட கமென்ட்ஸ்களை கேட்டு விடக்கூடாது என அவரின் தீவிர ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
படத்தில் கமலின் நடிப்பும் கூட நெகட்டிவ் விமர்சனங்களையே வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டு வரும் போதும் கமல்ஹாசன் மணிரத்னத்தின் “தக்-லைஃப்” படத்தின் ஷூட்டிங்கில் படு பிசியாக இருந்து வருகிறார்.
இப்போதெல்லாம் கமலை எங்கே பார்த்தாலும் தலையில் தொப்பியோடு தான் பார்க்க முடிகிறது. “தக் – லைஃப்” படத்தில் கமலின் கெட்-டப் தெரிந்து விடக்கூடாது என தான் இப்படி தனது தலையை தொப்பியை வைத்து மறைத்தே வலம் வருகிறார் என லீக் ஆகியுள்ளது புது இன்ஃபர்மேசன்.
தமிழ் சினிமாவில் வெற்றி தோல்விகளைப் பற்றி எல்லாம் கவலை படாமல் புதுமையை புகுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுபவர் கமல். இதனால் தான் இவரை கலைஞானி என்று கூட அழைப்பார்கள் அவரது ரசிகர்கள்.
சமீபத்தில் அதிகமாக பிரபலமாகி வருவது ஏஐ டெக்னாலஜி. இந்த நவீன தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்வதற்காக கமல் அமெரிக்காவிற்கு பறக்க ப்ளான் பண்ணியிருக்கிறாராம். தமிழ் சினிமா ஆடியன்ஸ் அடுத்த லேடஸ்ட் டெக்னாலஜியை பார்க்க தயாராக விட வேண்டியது தான் போல.