சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.இக்கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசு போராடி வருகிறது. தீட்சிதர்கள் இக்கோவிலை விட்டுக்கொடுக்க முடியாமல் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் 5 பேர் கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரவு செலவு கணக்குகளை பார்ப்பதற்காக வந்துள்ளது.
இதற்கு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மே 23ஆம் தேதி, சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் பேசிய நபரை
அரசு கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து சிவனடியார்கள் போராடினார்கள். கயவனை தண்டிக்காமல், போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலை முற்றுகையிட்டுள்ளது இந்து சமய அறநிலையத் துறை.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் அரசுக்கு என்ன வேலை? தொடர்ச்சியாக ஒரு சமயத்தாரை மட்டும் மனவருத்தத்துக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கும் இந்த
அரசு செய்யும் காரியங்களைக் கண்டு
அமைதியாக இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.