உதயநிதி துணை முதலமைச்சராவது இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்று எச் ராஜா குற்றச்சாட்டி இருக்கின்றார்.
காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினர் எச் ராஜா அந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்திருந்ததாவது “சனாதானம் என்பது என்ன? இந்து வாழ்வியலே நீதிமன்றமே கூறிவிட்டது.
சனாதனத்தில் கூறியுள்ள உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை தற்போது மிகப்பெரிய வியாபாரமாக மாறி உள்ளது. தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கும் மேலாக சனாதனம் பற்றிய எதிர்ப்பு காதில் விழுந்து கொண்டு தான் இருக்கின்றது. சனாதான தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்.
ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து சனாதானத்தை பற்றி எதிர்த்து பேசி வருகின்றார். உதயநிதி ஸ்டாலின் மட்டும் துணை முதலமைச்சர் ஆனால் விரைவில் தமிழகத்தில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வரும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை போலீசார் அவசர அவசரமாக சுட்டுக் கொண்டு விட்டது ஏன்?
ஆரம்ப கட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் அனைவரும் சிபிஐ விசாரணையை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்த நிலையிலும் தற்போது வரை அது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை, சிபிஐ விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும்” என்று அவர் அந்த பேட்டியில் வலியுறுத்தி இருக்கின்றார்.

