Published
9 months agoon
பிரின்ஸ் மகேஷ்பாபு என்று அழைக்கப்படக்கூடிய மகேஷ்பாபு தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர் ஆவார். இவர் நடிக்கும் படங்களில் நல்ல ஆக்சன் படங்கள் பலவற்றின் ரீமேக்கில் நடிகர் விஜய்தான் நடித்துள்ளார்.
விஜய் நடித்த கில்லி, போக்கிரி போன்ற படங்கள் , மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படங்களின் தழுவல்களேயாகும் . மகேஷ்பாபுவுக்கு என்று தெலுங்கில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.
இங்க இவுக எப்படியோ அங்க அவுக என சுந்தரபாண்டியன் படத்தின் மீம்ஸ் ஒன்று இணையத்தில் சுற்றிவரும். அது போல இங்க விஜய் எப்படியோ அங்க மகேஷ்பாபு அதிக ரசிகர் பட்டாளத்துடன் இருக்கிறார்.
இரு நடிகர்களின் படங்களுக்குமே மாஸ் அதிகம் இருக்கும் நிலையில் இருவரும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்ற அடிப்படையில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் முக்கிய காட்சியில் விஜய்யுடன் மகேஷ்பாபுவும் இணைந்து நடிக்கிறாராம்.
விஜயை இயக்கும் இயக்குனர் வம்சியின் பேச்சை தட்ட முடியாமல் மகேஷ்பாபு இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளாராம்.
விஜய் அஜீத்துடன் மீண்டும் இணைய தயாராகும் பிரகாஷ்ராஜ்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு இன்று பிறந்த நாள்
மேக்கப் மேன் மீது மகேஷ்பாபுவுக்கு இவ்வளவு பாசமா
தமிழில் டப் செய்து வெளியாகும் மகேஷ்பாபுவின் ஆக்சன் படம்
‘பிகில்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
தம்பிக்கு வாழ்த்துக்கள் – விஜயின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு