cinema news
திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி
நானும் ரவுடிதான் படத்தை இயக்கியதன் மூலம் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது திருமணம் செய்யாமலே இவர்கள் இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
எப்போ திருமணம் எப்போ திருமணம் என அனைத்து மீடியாக்களும் கேள்வி கேட்டு ஓய்ந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன் தினம் ஜூன் 9 ம் தேதி நாள் குறித்து மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இருவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு , அங்கு லேசாக போட்டோ ஷூட் நடத்தினர்.
இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் நயனும், விக்கியும் ரத வீதியில் செருப்புடன் புகைப்படம் எடுத்தது தவறு என சர்ச்சையானது. திருப்பதி தேவஸ்தானமும் இது குறித்து இருவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்று கூறிய நிலையில், விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது, புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் நானும் நயனும் காலணி அணிந்திருந்ததை உணரவில்லை. கடவுளுக்கு எந்த அவமரியாதையும் செய்யவில்லை எங்கள் செயலால் பக்தர்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறோம் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.