Entertainment
ராயன் ரவுண்டப் ஸ்டார்டட்…தனுஷுக்கு டஃப் கொடுக்கும் எஸ்.ஜே.சூர்யா…டெர்ரிஃபிக்கா வந்திருக்கும் டிரையலர்!…
தனுஷின் ஐம்பதாவது படமான “ராயன்”ஐ சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. “பவர் பாண்டி” படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கியுள்ள படம் இது. ஏ.ஆர்.ரகுமான் – தனுஷ் காம்போவில் படத்தின் பாடல்கள் வெளியாகி வைப் ஆகியது. இந்த காம்போ இதற்கு முன் இணைந்த படங்களின் ஆல்பம் எல்லாமே மெஹா ஹிட் தான்.
இதுவும் கூட “ராயன்” பற்றிய பல்சை எகிற வைக்கக்கூடிய மேட்டராக இருக்கிறது, “ராயன்” படத்தின் டிரையலரை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே சூர்யா, சந்தீப் துஷன், துஷரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார், சரவணன் என சவுத் இந்தியன் சினி இன்ரஸ்ட்ரியின் லைம் லைட் ஆக்டர்ஸ் பலரும் தனுஷுடன லைன் கட்டி நடித்திருக்கிறார்கள்.
அல்டிமேட் ஆக்சன் மூவியாகத்தான் இருக்கப்போகிறது என்பது டிரையலரை பார்த்ததாலே அது தெளிவாக தெரிந்து விடும். யங் லுக்கில் எஸ்.ஜே. சூர்யா பஞ்ச் டயலாக் பேசுகிறார்.
படம் முழுவதும் நடிப்பில் தனுஷுக்கு, எஸ்.ஜே.சூர்யா கட்டாயம் டஃப் கொரடுத்திருப்பார் என கன்ஃபர்மாகவே சொல்லிவிடலாம். பிரகாஷ்ராஜ் கையில் துப்பாக்கியோடு வந்து அவரது ஸ்கிரீன் ப்ரெசன்சும் படத்தில் நிச்சயமாக இருக்கிறது என்ற இன்ஃபர்மேஷனை சொல்லி விட்டார் டிரையலரில்.
முரட்டு மீசையுடன் தனுஷ் அடித்து தும்சம் செய்கிறார். வருகிற இருபத்தி ஆறாம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. தனது ஐம்பதாவது படத்தை ப்ளாக் பஸ்டராக கொடுக்க வேண்டும் என்பதில் தனுஷ் நிச்சயம் அதிக கவனம் காட்டியிருப்பார்.
படத்தின் ரைட்டர், டைரக்டர் அவரே என்பதால். ஏ.ஆர்.ரகுமானுக்கு மிகப்பெரிய ரோல் படத்தில் இருக்கிறது என்பதையும் தெளிவாகக் காட்டியிருக்கிறது டிரையலர்.
ராயன் ரவுண்டப் ஸ்டார்டட் என தனுஷ் ஃபேன்ச் இப்போதே சட்டை காலரை தூக்கி விட்டு சுற்றி வர ஆரம்பித்திருப்பார்கள் படு மாஸாக வந்திருக்கும் “ராயன்”டிரையலரை பார்த்த பிறகு.