Latest News
கிஸ்ஸை பாதியில் நிறுத்திய அனிரூத்…கமிட் ஆயிட்டு கமுக்கமான ரீசன்?…
“இந்தியன் – 2” ஆடியோ ரிலீஸ் நடந்து முடிந்ததும் ஷங்கர், கமல்ஹாசனை விட தமிழ்நாடு முழுவதும் அதிகமாக ரவுண்டு அடித்த பெயர் அனிரூத். ‘தாத்தா வாராரு, கதற உட போறாரு’ன்னு டியூன் போட்டு, அதை பாடலாக மாற்றினார். நெட்டிசன்கள் ட்ரால் செய்து இந்த பாடலை கலாய்த்து தள்ளிவிட்டனர். ஆனால் படம் ரிலீஸானதும் அனிரூத்தை மறந்தே போய் விட்டனர் ஃபேன்ஸ்.
ஆடியோ லாஞ்ச் நேரத்தில் படத்திற்கு மியூசிக் தான் மைனஸாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தில் எல்லாமே மைனஸானதால் அனிரூத் மறக்கடிக்கப்பட்டார். சின்னத்திரையின் மூலம் இன்ட்ரோ கிடைக்கப்பட்டவர் கவின். மெதுவாக பெரிய திரையில் தலையை காட்டத்துவங்கினார் சிவகார்த்திகேயனைப் போல.
“லிஃப்ட்”, “டாடா” படங்களில் நடித்திருக்கிறார் கவின். “டாடா” படம் இவருக்கு நல்ல ஃபேன் ஃபாலோவர்ஸை வாங்கிக் கொடுத்தது.
அடுத்து “ஸ்டார்” படத்தில் ஹீரோவாக நடித்தார் கவின். ஆனால் படத்திற்கு பெரிய அளவிலான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. ஆனால் படத்தில் கவினின் நடிப்பு ஹைலைட்டாக இருந்தது. ஃப்ளாப் படத்தை கொடுத்த நிலையில் கவின் “கிஸ்” படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
படு ஸ்பீடாக படத்தின் ஷூட்டிங் நடந்து வந்தது. ஆனால் திடீரென சடன் ப்ரேக் போட்டது போல ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
தீபாவளிக்கு “விடாமுயற்சி”யுடன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “கிஸ்” பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருக்கிறதாம். டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் இந்த படத்தின் மியூசிக் டைரக்டர் “இந்தியன் – 2″வின் அதே அனிரூத்தே தான்.
அனிரூத் “கிஸ்” படத்திற்கு சாங்ஸ் போட்டுக் கொடுக்காமல் மியூஸிக் கான்சர்ட்களில் பங்கேற்க சென்று விடுகிறாராம். சாங்ஸ் போஃர்ஷன் ஷூட் பாக்கியிருப்பதால் அனிரூத் தான் “கிஸ்” பட வேலைகள் பாதியில் நிற்க காரணம் என ஒரு ஹாட் நியூஸ் கோலிவிட்டிலிருந்து கசியத்துவங்கியுள்ளது. பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் இந்த தகவலை சொல்லியிருக்கிறார்.