நன்றி கொடுகா- விஷால் தந்தையின் மகிழ்ச்சி

நன்றி கொடுகா- விஷால் தந்தையின் மகிழ்ச்சி

தமிழில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷால். கடந்த சில வருடங்களுக்குள் தமிழின் மிக முன்னணி ஹீரோவாக வேகமாக முன்னேறினார்.

ஆரம்ப காலத்திலேயே ஆக்சன் படங்களில் அதிகம் நடித்து திமிரு, பூஜை, பாண்டியநாடு, வீரமே வாகை சூடும் என ஆக்சன் ப்ளாக் பஸ்டர் படங்களாக கொடுத்து முன்னணி ஹீரோவாக முன்னணியில் உள்ளார்.

நடிகர் சங்கத்தலைவராக, தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். இப்படி மிக வேகமாக முன்னேறிய விஷால் ஆரம்ப காலத்தில் இயக்குனர் நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். தற்போது இவர் துப்பறிவாளன் படத்தை இயக்கி வருகிறார்.

விஷால் தனது தந்தை ஜி.கே ரெட்டிக்கு அவரது பிறந்த நாளை ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அவரது தந்தை என் மகன் கொடுத்த மிகப்பெரிய பரிசு. உங்களின் பாராட்டும் ஆதரவும் நான் “நாட் அவுட் 100” ஐ எட்டுவேன் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்துள்ளது. நன்றி கொடுகா என கூறியுள்ளார்.