Latest News
அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி
இவ்வுலகில் இரக்கமுள்ள மனிதர்கள் சிலர் இருக்கவும்தான் கொஞ்சமாவது உலகம் உயிர்ப்புடன் இயங்குகிறது. தெருநாய்களிடம் பாசம் காட்டுவோர், பறவைகளிடம் பாசம் காட்டுவோர், என விலங்கு, பறவைகளிடம் பாசம் காட்டுவோர் எண்ணிக்கை அதிகம்.
இருந்தாலும் ஆன்மிக ரீதியாக நம் கர்மா எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய விடுவதில்லை. அதன் கர்மா அதன் துன்பங்களை அதுதான் அனுபவிக்க வேண்டும் என்றே உலகம் இயங்குகிறது.
இன்று மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள வொர்லி கடற்பாலத்தில் காயமடைந்த கழுகை, காப்பாற்ற காரில் இருந்து இறங்கிய இருவர் மீது கார் மோதியது.
கார் மோதியவுடன் ஜரிவாலா, காமத் என்ற இருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.