---Advertisement---

விடிய விடிய வேலை வாங்கிய விஜயகாந்த்…கண்ணீர் விட்டு கலங்கிப்போன பொன்னம்பலம்…

Published on: April 27, 2024
ponnambalam vijayakanth
---Advertisement---

நடிகர் விஜயகாந்த் என்றால் அவருடைய ஈவு, இரக்க குணமும் தான். அவரின் தாயுள்ளம் கொண்ட அன்பு அவரின் நினைவுகளை வரவழைக்கும் விதமான செயல்களை செய்து காட்டியவர்.

திரை உலகத்தின் பிரபலங்கள் எவரிடம் கேட்டாலும் தான் விஜயகாந்தின் மூலம் பெற்ற ஆதாயங்களை தயங்காமல் சொல்லுவார்கள். நடிகர் பொன்னம்பலத்துடன் ஆக்ரோஷமாக விஜயகாந்த் மோதுவது போல ஒரு சண்டைக்காட்சி எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதுவரை பொன்னம்பலத்திற்கென  என தனியாக சண்டை காட்சிகள் எந்த படத்திலும் வழங்க்ப்பட்டது கிடையாதாம்.

அதே நேரத்தில் பொன்னம்பலத்தினுடைய இளைய சகோதரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாம். விஜயகாந்த், பொன்னம்பலத்தை அழைத்து கல்யாணம் என்றைக்கு என கேட்டிருக்கிறார்.

அவரோ வருகிற 19ஆம் தேதி என சொல்லி இருக்கிறார். அடடே இன்னைக்கு 16ஆம் தேதி ஆயிடுச்சே. நீங்க கல்யாண வேளைகளை பார்க்க போகனும்லே, அப்போ ஒன்னு பண்ணுவோம் நீங்களும் நானும் மோதுற சண்டை காட்சியை இன்னைக்கே எடுத்துடுவோம் என சொல்லியிருக்கிறார்.

பொன்னம்பலத்தை விரைவாக அனுப்பவேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தாராம் விஜயகாந்த்.  அவர் கொடுத்த கால்ஷீட்டில் அன்றைய தேதிக்கான வேலையை ஏற்கனவே முடித்து கொடுக்கப்பட்டதாம்.

ponnambalam vijayakanth
ponnambalam vijayakanth

ஆனாலும் பொன்னம்பலத்திற்காக தன்னுடைய சோர்வையும் மனதில் வைக்காமல் விடிய, விடிய சண்டை காட்சியில் நடித்துக் கொடுத்தாராம். காட்சியை முழுவதுமாக முடித்து கொடுத்த  கிளம்பியிருக்கிறார் விஜயகாந்த்.

மறுநாள் காலையிலேயே சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து பொன்னம்பலத்தை அழைத்து பணத்தை கையில் கொடுத்து செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என சொல்லியிருக்கிறார். இப்போது தான் பணம் அதிகமாக தேவைப்படும் என்றும் சொல்லியிருக்கிறார். இதுபோல செய்கைகளால் தான் அவர் இன்றும் பலர் மனதில் “வானத்தைப்போல” உயர்ந்து நிற்கின்றார்.

পড়তে ভুলবেন না