சூப்பர் ஸ்டார் படத்தோடு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேல் வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் அடுத்து நடிக்கவிருக்கும் அடுத்த படத்தினுடைய பெயர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினுடைய வெற்றிப்படங்களில் ஒன்று “முரட்டுக்காளை”.
படத்தினுடைய தயாரிப்பு நிறுவன குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் ரஜினியை பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்த்திருக்கிறார். ரஜினி, ஜெய்சங்கர், ரதி, ஒய்.ஜி.மகேந்திரன் என பலரும் நடித்து வெளியான படம் “முரட்டுக்காளை”.
காளையனாக நடித்திருந்த ரஜினியின் ஸ்டைல் கலந்த ஹீரோயிஸத்தால் வாயடைத்து போய் நின்றிருக்கிறார்கள் ரஜினியை பிடிக்காத வேறு கதாநாயகர்களின் ரசிகர்கள் கூட.
ஏ.வி.எம். ப்ரொடக்சன்ஸ் தயாரிக்கும் படங்கள் எல்லாம் தரமாகத்தான் இருக்கும் என நம்பி சென்றவர்கள் ஏராளம் ஒரு காலத்தில். “முரட்டுக்காளை” படத்தை எடுப்பதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டதாம். இந்த இடவேளையில் சிரஞ்சீவி நடிப்பில் வேறு ஒரு படத்தை எடுக்க துவங்கிவிட்டதாம் ஏ.வி.எம். ‘முரட்டுக்காளை”படம் குறித்த பேச்சு வார்த்தைக்காக ரஜினியை சந்திக்க விரும்பிய தயாரிப்பாளர் ப்ரொடக்சன் மேலாளரை ரஜினியை சென்று சந்தித்து நேரம் கேட்க சொல்லியிருக்கிறார்.
ரஜினியை சந்தித்து விஷயத்தை சொல்லியிருக்கிறார் ஏ.வி.எம். மேலாளர். அதற்கு ரஜினியோ அவர் என்னை சந்திக்க வர வரவேன்டாம். நானே வருகிறேன் என சொல்லி கிளம்பி விட்டாராம். சார் நான் ஸ்கூட்டரில் தான் வந்திருக்கிறேன்.
மழை வேறு பெய்து கொண்டிருக்கிறது நான் சென்று காரை அனுப்புகிறேன் என சொன்னாராம் மேலாளர். ரஜினியோ பரவாயில்லை நானும் ஸ்கூட்டரிலேயே வருகிறேன். கார் எல்லாம் அனுப்ப வேண்டாம் என சொல்லிவிட்டு தயாரிப்பாளரை சந்தித்து உள்ளாராம் நேரில் சென்று.
இது தான் ரஜினிகாந்த் என்றும், அந்த எளிமை தான் அவரை மென்மேலும் உயரச்செய்தது என் சொல்லியிருக்கிறார் ஏ.வி.எம். சரவணனின் பேத்தி அருணா குகன்.