Connect with us

மைக் மோகன் மட்டுமில்லையாம் இவர்!…மயக்கம் கொடுத்த மன்மத மோகனுமாமே மச்சக்காரர் தான் போலயே?…

actor mohan

cinema news

மைக் மோகன் மட்டுமில்லையாம் இவர்!…மயக்கம் கொடுத்த மன்மத மோகனுமாமே மச்சக்காரர் தான் போலயே?…

பாலு மகேந்திராவின் மூடுபனி உள்ளிட்ட சில படங்களில் துக்கடா கேரக்டர்களில் நடித்து வந்தார் மோகன். கமலுடன் “கோகிலா”விலும், தொடர்ந்து “மூடுபனி”யிலும் நடித்தார். மகேந்திரனின் “நெஞ்சத்தை கிள்ளாதே” படத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு இவரின் வீட்டு வாசல் கதவை தட்டியது.

தொட்டதெல்லாம் ஜெயமே என்றப்ஒரு நிலை இருந்து வந்தது அப்போது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜெயச்சந்திரன்  போன்றவர்கள் இவருக்கு பின்னணியாக பாடல் பாட எஸ். என்.சுரேந்தர் இவரின் வசனங்களுக்கு டப்பிங் பேச என இப்படி தனக்கு என எதையும் உரிமை கொள்ளாமல் தமிழ் சினிமாவில் “வெள்ளி விழா” நாயகனாக வலம் வந்தவர் மோகன்.

பாடல்களுக்கு ஏற்ற நடிப்பையும், அசைவுகளையும் கொடுத்துவந்தார். 120 படங்கள் வரை நடித்துள்ள இவருக்கு 118 படங்கள் வரை எஸ்.என். சுரேந்தர் பின்னணி குரல் கொடுத்திருந்தார்.

மேடை நிகழ்ச்சிகளில் ஒரு சில படங்களில் மட்டுமே மைக்கை பிடித்து பாடுவது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், இவரது பெயர் ‘ரைமிங்காக’மைக் – மோகன் என மாறியது.

mohan

mohan

 

இவர் முன்னணியில் இருந்த நேரத்தில் பல நடிகைகளோடு தொடர்பு இருந்ததாக கிசு.கிசுக்கள் வலம் வந்தது. காதலிக்க  மறுத்த காரணத்தினால் இவர் மீது ஒரு புரளி கிளப்பி விடப்பட்டதாகவும், அதுவே இவரின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாகவும் சொல்லப்பட்டது.

கணக்கிட முடியாத அளவு உயரம் வரை சென்று மிகப்பெரிய பெயருக்கும், புகழுக்கும்  தன் வசம் தஞ்சம் கொடுத்து வைத்திருந்த போதிலும் மர்ம நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டார் மோகன்.

திடீரென சினிமாவிலிருந்து  மாயமான மைக் மோகன்  “அன்புள்ள காதலுக்கு”,”சுட்ட பழம்” படங்களில் நடித்தார். ஆனால் அது எடுபடவில்லை. இப்போது விஜயின் “கோட்” படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

More in cinema news

To Top