ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் இந்த நட்சத்திர பட்டாளங்கள் 1980 – 90களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்து கொண்டிருந்த நேரம் அது.
இப்படி இவர்களுக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டம், அவர்கள் படம் வெளிவரும் பொழுது அதை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் என கோடம்பாக்கமே குதூகலமாக இருந்த நேரத்தில் அனைவருக்கும் போட்டியாக உள்ளே நுழைந்தார் ராமராஜன்…
இவர் கொடுத்த வெற்றி படங்களும் கணக்கிட முடியாத அளவில் இருந்தது அந்த நேரத்தில். சக நடிகர்கள் எல்லாம் இவருடன் எப்படி போட்டியிடுவது என அஞ்சி தங்களது படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்க சிந்தித்ததும் உண்டு என சொல்லப்பட்டது ஒரு காலத்தில்…
கிட்டத்தட்ட 40 படங்கள் உதவி இயக்குனராகயிருந்து, இயக்குனராக மாறி பின்னர் கதாநாயகன் ஆனவர். “கிராமத்து நாயகன்” என மக்களால் போற்றப்படும் இவர், தற்பொழுது “சாமானியன்” என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.
1989ம் வருட தீபாவளி பண்டிகை தினத்தன்று இவர் நடித்த இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. “அன்பு கட்டளை”, “தங்கமான ராசா”, அதே நேரத்தில் ரஜினியின் “மாப்பிள்ளை”, கமல்ஹாசனுக்கு “வெற்றி விழா”. இப்படி பெரிய போட்டி நிலவிய தாம்…
கடும் சவால்களை படங்கள் ஒவ்வொன்றும் மாறி மாறி கொடுத்திருக்க. இந்த வசூல் பந்தயத்தில் அதிக பங்கினை தன்வசம் எடுத்துக் கொண்டது ராமராஜனின் “தங்கமான ராசா”.
இந்த வயதிலும் உற்சாகமாக நடித்து வரும் ரஜினிகாந்த்தை தனக்கு மிகவும் பிடிக்கும் தான் மதிக்கும் நபர்களில் ரஜினிகாந்த் ஒரு முக்கியமான ஒரு என ராமராஜன் சொல்லியிருந்தார்.