cinema news
இத்தனை படங்களில் இரண்டு கமலா?…பின்ன தசாவதாரம் போட்டவராச்சே!…
கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. இதுவரை இவர் போடாத வேஷத்தில் இன்னும் என்ன பாக்கி இருக்கிறது என்பதை கூகுளில் தான் தேட வேண்டும் போல…
“தசாவதாரம்” படத்தில் பத்து வேடங்கள் ஏற்று நடித்திருப்பார் “மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் நான்கு விதமான கமலையும், அபூர்வ சகோதரர்கள்”ல் சேதுபதி, அப்பு, ராஜா என மூன்று கமல்ஹாசனை பார்த்துள்ளோம்.
படங்களில் இரட்டை வேடங்கள் ஏற்று கமல் நடித்திருந்தது இத்தனையா? என்ன நமக்கு ஆச்சரியத்தை கூட கொடுக்கலாம். குழந்தை பருவத்திலேயே அவர் இரட்டை வேடம் போட்டிருக்கிறார்.
“பார்த்தால் பசிதீரும்”படத்தில் ‘பாபு – செல்வம்’. பின்னர் இளமை ததும்பிய கமல் தொடர்ச்சியாக “சட்டம் என் கையில்”, வித்தியாசமான முகத்தோற்றம் கொண்ட கமலாக “கல்யாணராமன்” படத்திலும், “கடல் மீன்கள்” அதனை தொடர்ந்து “சங்கர் லால்” இப்படி அவரது படங்களில் வித்தியாசத்தை தனது கேரியர் துவக்கத்திலிருந்தே செய்யத்துவங்கினார்.
இவரின் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன “தூங்காதே தம்பி தூங்காதே”, உபேந்திரா – மதன் என இருவேறு திசையில் “எனக்குள் ஒருவன்”, அதனை போல “ஒரு கைதியின் டைரி” , “மங்கம்மா சபதம்”.
வெளி நாட்டில் படமாக்கப்பட்ட “ஜப்பானில் கல்யாணராமன்” என திரைப்படங்களில் இவரது இரட்டை வேட நடிப்பு தொடந்து கொண்டே போனது. அதோடு அவ்வை சண்முகி படத்தில் அச்சசல் அக்ரஹாரத்து பெண்னாக என இவரின் நடிப்பு பேசப்பட்ட படங்கள் எல்லாம் ஏராளம்.
காதலை மையப்படுதிய “புன்னகை மன்னன்” படத்தில் மட்டும் தான் இரண்டு என நினைக்கப்பட்ட நிலையில் இரண்டாவது பாகமும் தயாராகி வருகின்ற “இந்தியன்”மற்றும் “ஆளவந்தான்” என இவர் இரட்டை வேடங்கள் ஏற்று நடித்த படங்களில் அதிகம் ஹிட் ஆனவையே..