Latest News
பாஜகவை எதிர்க்கும் பொன்னையன் – எடப்பாடி, மற்றும் பன்னீர்செல்வத்தின் கருத்து என்ன
கடந்த வருடம் ஆட்சி மாறியதில் திமுக ஆட்சியில் உள்ளது. அதிமுக ஆட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சியாக காண்பித்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை.
உதாரணாமாக திமுக ஆட்சியின் எதிர்மறையான சம்பவங்கள் நடந்தால் அதில் 50ல் எதிர்கருத்தை சொல்லிவிட்டு 50 சம்பவங்களுக்கு எந்த கருத்தும் சொல்வதில்லை.
ஈயம் பூசினது மாதிரியும் இருக்கணும், பூசாதது போலவும் இருக்கணும் என கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிபோல பளீர் சுளீரென எந்த போராட்டமும் திமுகவுக்கு எதிராக நடத்தவில்லை.
இதை பார்த்த அதிமுக முன்னாள் அவைத்தலைவர் பொன்னையன் பாஜக அதிமுகவை விழுங்கி வருகிறது என்ற வகையில் ஒரு பேசியுள்ளார். கடந்த ஒரு வருடங்களில் பெரும்பான்மையான பிரச்சினைகளில் எதிர்க்கட்சியை போல அதிமுக தான் பேசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பொன்னையனின் கருத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அது அவரின் சொந்த கருத்து என பதிலளித்துள்ளனர்.