Latest News
நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா
கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர் ராஜீவ்காந்தி வெடிகுண்டு வைத்துக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நேரடி தொடர்புடைய தனு, சிவராசன், சுபா போன்றோர் அந்த காலகட்டத்திலேயே இறந்து விட்ட நிலையில் இந்த கொலைக்கு உதவியதாக இலங்கையை சேர்ந்த நளினி, மற்றும் பேரறிவாளன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்பு அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ஆயுள் தண்டனைக்காலம் முடிந்து பல ஆண்டுகாலம் சிறையில் பேரறிவாளன் போன்றோர் இருந்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து பேரறிவாளன் ரிலீஸ் செய்யப்பட்டார்.
இதற்கு ஓய்வுபெற்ற போலீஸ் பெண் டி.எஸ்.பி அனுசியா கடும் கண்டனம் தெரிவித்தார். இவர் ராஜிவ் காந்தி குண்டுவெடிப்பில் நேரடியாக பாதிக்கப்பட்டு படுகாயமடைந்தவர், விரல்களை பறிகொடுத்தவர்.
இவர் செல்லுமிடமெல்லாம் பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து பேசி வருகிறார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய நளினியை பற்றிய கேள்வி கேட்ட நிருபர் ஒருவரிடம், உன் கேள்விக்கெலாம் பதில் சொல்ல முடியாது நீ எப்டி வேணாலும் போட்டுக்கோ என கோபமடைந்து வெளியேறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.