பிரதமர் பதவி விலக வேண்டும்- திருமாவளவன்

27

கரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதாக சொல்லப்ப்படுகிறது. தினமும் தமிழ்நாட்டில் மட்டுமே 9000, 10000 என்ற எண்ணிக்கைகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது இது கடந்த வருடத்தை காட்டிலும் அதிக எண்ணிக்கைதான்.

இந்த நிலையில் அதிகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி பதவி விலக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா முழுவதும் கரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையாக மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. போதுமான கால அவகாசம் இருந்தும் கரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறியதோடு பல்லாயிரக்கணக்கான உயிர் இழப்புகளுக்கும் காரணமாகியிருக்கும் பிரதமர் மோடி இந்த நிலைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

என திருமாவளவன் கூறியுள்ளார்.

பாருங்க:  அருண் ஜெட்லி காலமானார் - பாஜகவினர் இரங்கல்
Previous articleதமிழில் வெளியாகும் ரங்கஸ்தலம்
Next articleவாட்ஸப் யூஸ் செய்பவர்களா கொஞ்சம் உஷாரா இருங்க