மே 1 என்றால் எப்படி உழைப்பாளர்கள் தினம் நினைவுக்கு வருமோ, அதே போலே தான் அஜீத்குமாரின் பிறந்த நாள் நினைவுக்கு வந்துவிடும் அவரின் ரசிகர்களுக்கு. திருவிழாதான் இந்த நாள் அவர்களுக்கு. வலைதளத்தை அதிர விடுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சமூக நலன் சார்ந்த நல்ல காரியங்களை அவரது பிறந்த தினத்தன்று செய்து மகிழ்வடைவார்கள் அஜீத் ரசிகர்கள்.
தனியாளாக சிகரம் தொட்டவராக பார்க்கப்படுபவர் அஜீத். ஆயிரம் தோல்விகளை பார்த்தவன் நான் என அவரே பெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவில் அவரின் வாழ்க்கை முழுவதும் மேடு,பள்ளங்கள் தான்.
“அமர்க்களம்” படத்தில் ஜோடியாக நடித்த ஷாலினியின் மீது காதல் உண்டாக அதனை வெளிப்படுத்தி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடித்து அனோஷ்கா, ஆத்விக் என இரு குழந்தைகளுக்கு தந்தையானார் அஜீத்.
தங்களது காதல் வாழ்வு 25ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் விதமாக இவர்கள் இருவரும் சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை வலைதளத்தில் ஷாலினி பதிவிட்டு, அஜீத் ரசிகர்களின் அன்பினை பெற்றார்கள் இருவரும்.
இப்படி இன்றும் மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அஜீத் – ஷாலினி தம்பதியர் பல நேரங்களில் காதல் பற்றி பேசப்படும் பொழுது உதாரணமாக சொல்லப்படுகிறார்கள். மே 1ம் தேதியான இன்று பிறந்த நாள் கொண்டாடும் தனது காதல் கணவராகிய அஜீத்குமாருக்கு ‘டுகாட்டி’ பைக் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளாராம் ஷாலினி.
ஏற்கனவே அஜீத் பிறந்த தின கொண்டாட்டங்களை கலைகட்ட வைத்து வரும் ரசிகர்கள் ஷாலினி வழங்கிய அன்பு பரிசு குறித்த செய்தியை கேட்டபிறகு மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்களாம்.