cinema news
லலித் அவுட் சுதன் இன்?… போக்கிரி கிட்ட போய் மங்காத்தாவா!…
விஜய் தற்போது நடித்து வரும் “கோட்” படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்ற நிலையில அந்த படத்தினுடைய ‘ஃபர்ஸ்ட் சிங்கிள்’ பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே கலவையன விமர்சனத்தை பெற்றிருந்தது.
விஜயின் அடுத்த படமான 69 குறித்த தகவல்கள் வெளிவர தற்பொழுது வெளிவர துவங்கியுள்ளது. லோகேஷ் கனகராஜ், அட்லீ இவர்களே மீண்டும் விஜயை இயக்கலாம் எனவும் பேசப்பட்டது.
அப்படியே தயாரிப்பு பொறுப்பை லலித் ஏற்கயிருக்கிறார் என சொல்லப்பட்டது. விஜய், லலித் தரப்பிலிருந்து இந்த செய்தி மறுக்கப்பட்டு இணையப்போவதில்லை என சொல்லப்படுகிறது.
விஜயின் மேலாளர் ஜெகதீஷ், லலித்துடன் இணைந்து “விஜய் 69” தயாரிப்பார் என பேசப்பட்டு வந்த நேரத்தில் ‘பேஷன் ஸ்டூடியோஸ்’சுதன் இந்த படத்தில் இணைய போவதாக புது தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ‘வலைப்பேச்சு’அந்தணன்.
ஜெகதீஷின் பார்ட்னரானா சுதனுக்கு இந்த வாய்ப்பினை பெற்று தருவதில் ஜெகதீஷ் மும்முரமாக இருக்கிறாராம். லலித்துடன் இணைந்து படத்தை அவர் தயாரிப்பதை விட சுதனுடன் கூட்டணி வைத்தால் அவருக்கு லாபத்தில் ஒரு பெரிய பங்கு வரும் என்று கணக்கு போடப்பட்டதால் பட தயாரிப்பு காய் சுதனை நோக்கி நகர்கிறதாம்.
“கோட்” படத்தை எடுத்து வரும் ஏ.ஜி.எஸ். கூட ஒரு விஜய் 69க்கிற்கு போட்டிபோடலாம். ஆனால் “கோட்” படம் “லியோ”வை விட பெரிய வணிகத்தை பெற்று தரவில்லை என்பதால் அவர்கள் இதில் கவனம் செலுத்த மாட்டார்கள். அப்படி அவர்கள் செலுத்தினால் விஜயின் சம்பளத்தை குறைப்பது குறித்தும் பேசப்படலாம். அதனால் சுதன் தான் விஜயின் அடுத்தப்படத்தை தயாரிப்பார் என உறுதிப்பட கூறியுள்ளார் அந்தணன்.