gangai amran ilayaraja
gangai amran ilayaraja

அடடே அவரு மெட்டுப்போட இவரு பாட்டு எழுத சூப்பர்யா!… மெகா ஹிட் ஆனா அண்ணன் தம்பி காம்பினேஷன்…

இசை இப்படியெல்லாம் இருக்கும் என்பதை உலகத்துக்கு எடுத்துக் காட்டியவர் இளையராஜா. நிழல் போல அவரைத்தொடர்ந்தே தமிழ் சினிமாவில் பயணித்து வந்தவர் அவரின் சகோதரர் கங்கை அமரன்.

இவரும் இசையமைத்துள்ளார் இவரும் பாடல்களை பாடி உள்ளார் படங்களையும் இயக்கி உள்ளார்.  ஆனால் இவருக்கு மேலுமொரு தனிச்சிறப்பும் உண்டு.  பாடல்களை எழுதுவதில் வல்லவர் இவர்

1980 – 90 கால கட்டங்களில் நம்மை  எல்லாம் மெய்மறக்கச் செய்த பல பாடல்களினுடைய வரிகளுக்கு சொந்தக்காரர் இவர்தான். பாடலாசிரியர் கங்கை அமரனின் பாடல்கள் இன்றும் நம் மனதில் உலா வந்து கொண்டுதான் இருக்கும்.

gangai amaran
gangai amaran

“16 வயதினிலே”வில் ‘செந்தூரப்பூவே’, “கிழக்கே போகும் ரயில்” படத்தில் ‘பூவரசம்பூ பூத்தாச்சு’, “முள்ளும் மலரும்” படத்தில் ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோற’,  ‘ராமன் ஆனடாளும்’ பாடல், “புதிய வார்ப்புகள்” படத்தில் ‘தம் தன னம் தன தாளம் வரும்’, “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” படத்தில் ‘வெத்தல வெத்தல,  கொளுந்து வெத்தலயோ’ இந்த பாடல்கள் எல்லாம் கங்கை அமரனின் கை வண்ணமே.

‘நிழல்கள்”  படத்தில் ‘பூங்கதவே தாழ் திரவாய்’, “மூடுபனி”யில் ‘என் இனிய பொன் நிலாவே’,  “ஜானி” படத்தில் ‘ ஆசைய காதத்துல தூது விட்டு’, ஒரு இனிய மனது’.

“சின்னவர்” படத்தில் ‘அந்தியில வானம்’ இவை அனைத்தின் வரிகளையும் எழுதியது கங்கை அமரனே. “அம்மன் கோவில் கிழக்காலே”, “கரகாட்டக்காரன்” படங்களில் அனைத்து பாடல்களையும் எழுதியது  கங்கை அமரனே.

வரிகளால் பாட்டு ஹிட்டானதா? அல்லது இசையினால் வெற்றி பெற்றதா? என சிந்திக்க வைத்தவை இவைகலெல்லாம். மொத்தத்தில் சகோதரர்கள் இருவரின் காம்பினேஷன் தமிழ் சினிமாவில் நல்ல பாடல்களை கொடுத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.