cinema news
நீங்க கிங்ன்னா நாங்க குயினு…கெட்-அப் மாத்தி அசால்ட் பண்ணிய நடிகைகள்…
சிவாஜி, கமல்ஹாசன் துவங்கி விக்ரம், சூர்யா. சூரி வரை ரசிகர்களுக்காக தங்களுடைய உடல் கட்டமைப்பை, தங்களுடைய தோற்றத்தை மாற்றி ரிஸ்க் எடுத்து படங்களில் நடித்து வருகின்றனர்.
விக்ரம் “ஐ”படத்திற்காக உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடற்கட்டை வித்தியாசமாக மாற்றி காட்டி நடித்திருப்பார். சூரி காமெடியனாக நடிக்கத்துவங்கி, பின்னர் தனக்கு கிடைத்த “ஹீரோ”வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் அவருடைய உடம்பில் சிக்ஸ் பேக் கிடைக்க, அவ்வளவு உழைத்தார்.
“ஆணழகன்” படத்தில் பிரசாந்த் ஒரு சில காட்சிகளில் பெண் வேடம் ஏற்று நடித்தார். கமல் “அவ்வை சண்முகி” படத்தில் தனது மகளின் மீது கொண்டிருந்த பாசத்தால் வேலைக்காரியாக மீனா வீட்டிற்குள் நுழைய சண்முகி மாயாகி அச்சு அசல் பெண்னாகவே தனது தோற்றத்தை மாற்றி நடித்திருந்தார்.
இப்படி ஆண்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் தங்களை படத்துக்கு ஏற்ற கெட்டப்களுக்காக மாற்றங்களை செய்திருந்ததாக நம்மை நினைக்க வைக்கலாம்.
காட்சி இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுத்த நடிகைகள் பற்றி தெரியுமா?. லட்சுமி ராமகிருஷ்ணன் “யுத்தம் செய்” படத்திற்காக நிஜமாகவே மொட்டை அடித்திருக்கிறார்.
அதே போல “கொடி வீரன்” படத்திற்காக பூரணாகவும் மொட்டை அடித்திருக்கிறார். இவர்கள் இருவரை போலவே “முப்பொழுதும் உன் கற்பனைகள்” படத்தில் அம்மா வேடத்தில் நடித்திருந்த அனுபமா குமார் தனது கேரக்டரை வலுசேர்க்க மொட்டை அடித்திருக்கிறார்.
நடிப்பின் மீது இவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும் அதன் மீது இருந்த அர்ப்பணிப்பிற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்ததாக கருதப்படுகிறது.