cinema news
முண்டாசுப்பட்டியும் முனீஷ்காந்தும்!… காப்பாத்தி விட்ட காளி வெங்கட்?…
“முண்டாசுப்பட்டி” படத்தில் டப்பிங் பேச வர வேண்டியவர் வராத காரணத்தினால் அவருக்கு பதிலாக முனீஷ்காந்த் டப்பிங் பேசியிருக்கிறார். திருப்பூரை சேர்ந்த அந்த டப்பிங் ஆர்டிஸ்ட் வர தாமதப்படுத்தியதே முனீஷை முன்னுக்குத்தள்ளியது.
குறும்படங்களில் நடிக்க நாயகன், கலைஞர்கள் தேர்வின் போது முனீஷ்காந்தை அனுகினார்களாம். இப்படி இருக்கையில் முனீஷ்காந்திற்கு அடித்தது அதிர்ஷ்டம். டப்பிங் பேச அழைக்கப்பட்டார் “முண்டாசுப்பட்டி” படத்தில்.
அவர் டப்பிங் பேசியதை திரையில் பார்த்து, கேட்ட பொழுது அந்த காட்சியினுடைய தரம் கிட்டத்தட்ட நூறு சதவீதம் பொருந்தியதாம். அதோடு மட்டுமல்லமல் இயக்குனரின் எதிர்பார்ப்பை அப்படியே நிறைவேற்றி கொடுத்திருந்திருக்கிறார்.
இவரது திறமையால் ஈர்க்கப்பட்ட இயக்குனரோ இவருக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பினையும் வழங்கி விட்டார். இவருக்கு இப்படி ஒரு வரக்காரணமாக இருந்தவர் நகைச்சுவை நடிகர் காளி வெங்கட்.
தனுஷுடன் “கொடி” படத்திலும், ஜெயம் ரவியுடன் “மிருதன்” படத்திலும் நடித்து பிரபலமானவர்.
காளி வெங்கட் தான் “முண்டாசுப்பட்டி” படக்குழு டப்பிங் பேச ஆள் இல்லாமல் இருந்த நேரத்தில் முனீஷ்காந்த்தை பற்றி சொல்லியிருக்கிறார். முனீஷ் மீது காளி வெங்கட் கொண்டிருந்த நம்பிக்கையை வீண்டிக்காமல் அர்பணிப்புடன் காட்டிய ஆர்வமும், அவரின் தொடர் உழைப்பும் தான் அவரை சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வைத்தது.
“பேட்ட” படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். அதனைப்போலவே தனுஷுடன் “பட்டாஸ்” படத்திலும், சிவகார்த்திகேயனுடன் “டான்” படத்திலும் நடித்திருகக்கிறார்.
காளி வெங்கட்டோ இதை பற்றி பேசும் போது முனீஸின் வளர்ச்சிக்கு காரணம் அவரின் திறமை மட்டும் தானே தவிற நான் கிடையாது என சொல்லிவிட்டார்.