முத்தையா இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் வெளிவந்த படம் “குட்டிப்புலி”. இயக்குனராக களம் கண்டு அவர் இயக்கிய படத்தில் அவரே நாயகன் என மாஸ் ஆக அறிமுகம் கண்டவர் சசிக்குமார். “சுப்ரமணியபுரம்”, “நாடோடிகள்” என அடுத்தடுத்து வெற்றிப்படங்கள்.
இந்த வரிசையில் முத்தையாவின் தாய்-மகன் பாசத்தை மையமாக கொண்ட கதையில் நடித்திருந்தார் சசிக்குமார். சரண்யா பொன்வண்ணன், சசிக்குமாருக்கு அம்மாவாக நடித்திருந்தார். தாய்க்காக எதையும் செய்யும் மகன், மகனின் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் கையில் கத்தி எடுக்கும் பாசமிகுந்த தாய்.
படம் பார்க்கவந்தவர்களை சென்டிமென்ட் காட்சிகளால் உருக வைத்திருந்தார் இயக்குனர். சசிக்குமாருக்கு ஜோடியாக லட்சுமி மேனன். இருவரின் காதல் காட்சிகள் படத்தை மேலும் ரசிக்க வைத்திருந்து.

அதிரடி ஹீரோவான சசிக்குமாரை தனது அன்பால் அரவனைக்கும் காதலியாக லட்சுமி மேனன். இறுதியில் இருவருக்கும் திருமணம். இப்படி ரோமேன்ஸ்,ம் சென்டிமென்ட், காமடி கலவையாக படத்தினை கொடுத்திருந்தார் சசிக்குமார்.
சசிக்குமாரை கொலை செய்தே தீரவேண்டும் என்ற வெறியோடு காத்திருக்கும் வில்லனிடம் தனது மகனுக்காக கெஞ்சும் சரண்யா நடிப்பில் அசத்தியிருந்தார்.
மகன் மீது தனது பாசத்தை விவரிக்கும் காட்சிகளில் படம் பார்க்கவந்தவர்களின் கண்களை குளமாக்கியிருப்பார் தனது உருக்கமான நடிப்பால்.
ஒரு பக்கம் படம் இப்படி சென்று கொண்டிருக்க, சசிக்குமாரின் நண்பர்கள் அடிக்குக் லூட்டியால் கண்ணீர் வந்த கண்களின் முகத்தில் சிரிப்பும் சேர்ந்து வந்தது.
கடந்த 2013ம் வருடம் இதே மே மாதம், 30ம்தேதியில் வெள்ளித்திரைக்கு வந்தடைந்தது, “கருடன்” படத்தில் தற்போது சூரியுடன் முக்கிய வேடத்தில் நடித்து வரும் சசிக்குமாரின் பெயரை சொல்லும் படமாக அமைந்திருந்தது இந்த “குட்டிப்புலி” படம்