Published
11 months agoon
இசைஞானி இளையராஜாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பலருக்கும் அவர் பாடல்கள்தான் மருந்து. அப்படி இருக்கும் இளையராஜா இதுவரை அரசியல் ரீதியாக பேசவில்லை. முதன்முறையாக பிரதமர் மோடியை புகழ்கிறேன் என சர்ச்சையில் மாட்டிகொண்டார்.
அம்பேத்கர் உயிருடன் இருந்திருந்தால் மோடியை புகழ்ந்திருப்பார் எனவும் முத்தலாக் உள்ளிட்ட விசயங்களில் மோடிக்கு ஆதரவாகவும் இளையராஜா கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த கருத்துக்கு எதிராக அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இளையராஜா பேசியது தவறு என்றும் இளையராஜா பேசியது சரி என்றும் இருபக்கமும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
சிலர் இளையராஜாவின் பாடல்கள் தான் என்றும் இனிக்கிறது ஆனால் அவரின் கருத்துக்களை நாங்கள் ஏற்க இயலவில்லை என கூறி வருகின்றனர்.