cinema news
இனி குஷி தான்…தீனதயாளன் வேற திரும்ப வரப்போறாராம்!…ஏ.எம்.ரத்தினம் போடும் புதுக்கணக்கு?…
“கில்லி” பட ரீ-ரிலீஸ் தமிழ் திரை உலகத்தையே உற்றுப்பார்க்க வைத்துள்ளது. படம் ரிலீசான போது என்ன வரவேற்பு இருந்ததோ அது இம்மியளவும் குறையாமல் இப்பொழுதும் இருந்ததால் சந்தோஷம் நிரம்பி வழிந்ததாம்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களுடைய பழைய வெற்றி படங்களையெல்லாம் தூசு தட்டி எடுக்க துவங்கியுள்ளனர். “கில்லி” ரீ-ரிலீசுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து வாயடைத்து போகியிருக்கிறாராம் அதன் தயாரிபாளர் ஏ.எம்.ரத்தினம்.
இது தான் சரியான நேரம் நம்ம புதுசா ஒரு படத்தை எடுத்து அதுல காசை போட்டு கஷ்டப்படுவதை விட நம்ம பழைய படங்கள் எதையாவது ரீ-ரிலீஸ் செய்யலாமன்னு ரத்தினம் யோசிக்கிறதா ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.
ஷங்கர் – கமல் கூட்டணியில் உருவான “இந்தியன்” படமும் இவர் தயாரித்ததே. ஆகையால் அதையும் ரீ-ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகிறாராம் ஏ.எம்.ரத்தினம்.
“இந்தியன் 2” வரவிருக்கின்ற நேரத்தில் “இந்தியன்” முதல் பாகம் வெளிவந்தால் அதுவும் நன்றாகத்தான் இருக்கும். விஜய் நடிப்பில் விஸ்வரூப வெற்றியடைந்த “குஷி”யின் தயாரிப்பாளரும் ரத்தினமே தான்.
அவர் போட்டுள்ள கணக்கின்படி விரைவில் ரசிகர்களை குஷிப்படுத்த போகின்ற மாதிரி தான் செய்திகள் வருகிறதாம். இந்த திட்டததை எப்படி செயல்படுத்த போறார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் அந்தணன் சொல்லியிருக்கிறார்.
இதே போல் மே 1ம் தேதி அஜித்குமாரின் பிறந்த தினம். அன்று “மங்காத்தா” ரீ-ரிலீஸ் ஆகப்போகிறது என காத்திருக்கும் ரசிகர்களுக்கு பட உரிமை விவகாரங்களால் தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்ய வாய்ப்பு குறைவே, ஆனால் அயல்நாடுகளில் ரிலீஸ் ஆக வாய்ப்புகள் அதிகம் என்ற தகவலும் கசிந்துள்ளது.
தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க அஜீத் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய “தீனா” படத்தை மே ஒன்றாம் தேதியன்று ரீ-ரிலீஸ் செய்ய ஒரு பிளான் இருப்பதாகவும் செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருக்கிறது….