cinema news
இந்தியன் தாத்தா பராக்!…பராக்…!ஷங்கர் போட்ட பக்கா ஸ்கெட்ச்?…
‘லைகா புரொடக்சன்ஸ்’ – ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ தயரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெள்ளித்திரையை தொட தயாராக இருக்கிறது இந்தியன்- 2.
தமிழ் திரை உலகை, உலக சினிமா ரசிகர்களை திரும்பிப்பார்க்க வைத்த படம் இந்தியன் முதல் பாகம். வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன் இரண்டாம் பாகத்திலேயும் கமல் – ஷங்கர் கூட்டணியே இணைந்துள்ளது. பிறகு என்ன கேட்கவா வேண்டும். இதுவும் வெற்றிதான் என அடித்து அரூடம் சொல்லி வருகின்றனர் உலக நாயகன் ரசிகர்கள்.
வருகிற மே மாதம் 16ம் தேதி இந்தியன்-2 பாடல்கள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அனிரூத் இசையமைப்பை மேற்கொண்டுள்ளார்.
ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தானே. அதனால் இந்த இசை வெளியீட்டு விழாவையும் வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என்பதில் ஷங்கர் மிக பிடிவாதமாக இருக்கின்றாராம். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து நடக்கயிருப்பதாக மேலும் ஒரு செய்தியும் கசிந்துள்ளது.
பிரம்மாண்டம் ஏற்பாட்டில் மட்டுமிருந்தால் போதுமா?, மேடை கலைகட்ட வேண்டுமல்லவா, அதனால் சூப்பர் ஸ்டாரும், கமலின் நெருங்கிய நண்பருமான ரஜினிகாந்தை அழைக்கவும் முடிவு செய்துள்ளாராம் ஷங்கர்.
இது மட்டும் போததே இன்னும் அதிகம் இருந்தால் மிக நன்றாக இருக்குமே என்ற சிந்தனை மறுபடியும் ஷங்கரின் மூளையை குடைய துவங்கியதாம். சரி இன்னொரு இன்ப அதிர்ச்சியை விழாவில் கொடுத்து விடலாம் என நினைத்த ஷங்கர், ரஜினியின் நெருங்கிய நண்பரான தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியையும் அவரது மகனும், டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ராம் சரனையும் கூப்பிட உள்ளாராம். இந்த தகவல்களை “வலைப்பேச்சு” அந்தணன் தெளிவாக சொல்லியிருக்கிறார்.