செந்தில் நகைச்சுவை நடிகராக தனியாக படங்களில் காமெடி செய்து வந்தார். பின்னர் கவுண்டமணியுடன் இணைந்து நகைச்சுவை என்றால் செந்திலுமே என முத்திரை பதித்தார். அறிமுக கதாநாயகர்கள் முதல் முன்னணிகள் வரை பலருடனும் நடித்திருக்கிறார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் நாடகங்களில் நடித்து வந்தவர். எந்த வேஷம் கிடைத்தாலும் அதில் நடித்த வந்திருக்கிறார் செந்தில். கவுண்டமணியுடன் கூட நாடகங்களில் நடிக்கும் போது தான் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு நாடக ஒத்திகையின் போது தான் செந்திலை பார்த்திருக்கிறார் பாக்யராஜ். அங்கே இருந்த சக நடிகர்கள் முதல் நாடக கம்பெனியில் வேலை செய்த அனைவரும் செந்தில் அதிகமாக வேலை வாங்கி அவரை மிகத் தரக்குறைவாக நடத்தி வந்தார்களாம்.
‘இங்க வாடா கருப்பா’என்று தான் அழைப்பார்களாம். யார் என்ன வேலை கொடுத்தாலும் அதனை சளைக்காமல் செய்வாராம் செந்தில்.
இந்த காட்சிகளை எல்லாம் கவனித்த பாக்கியராஜ் செந்திலுக்கு நிச்சயமாக ஒரு நல்ல வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று என முடிவு எடுத்திருக்கிறார்.
அப்படித்தான் பாக்யராஜ் இயக்கிய “மௌன கீதங்கள்”, “இன்று போய் நாளை வா” போன்ற படங்களில் நடிக்க வைத்திருக்கிறார்.
“தூறல் நின்னு போச்சு” படத்தில் குஸ்தி வாத்தியாராக நடித்திருப்பார் எம்.என்.நம்பியார். அரது உதவியாளாராக செந்தில் வந்திருப்பார். தனக்கு இப்படி ஒரு வாய்ப்பா?, எம்,ஜி.ஆர், சிவாஜியுடனெல்லாம் நடித்த மிகப்பெரிய ஒரு நடிகருடன் இவ்வளவு நெருக்கமாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை என பாக்கியராஜிடம் நெகிழ்ந்து போய் அழுதிருக்கிறார் செந்தில்.