நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, குஜராத்தில் கலவரம் நடந்தபோது அப்போதைய முதல்வருக்கு சட்டம் ஒழுங்கு பற்றி தெரியாதா? ஒரு சின்ன குழந்தையை நெருப்பில் காண்பிச்சாங்களே அதெல்லாம் என்ன? எங்களை மீறி சட்டம் ஒழுங்கு போயிருச்சுன்னு எப்படி சொல்ல முடியும்.
8 ஆண்டுகளில் இவர்கள் செய்த சாதனை என்ன, நான் இவ்வளவு நேரம் இவ்வளவு ஊடகவியலாளர்களை சந்திக்கிறேன். இந்த மாதிரி ஒரு பேட்டி கொடுக்க சொல்லுங்க பிரதமர, எதையும் ஒழிக்கல, நீட் தேர்வு கொண்டு வந்தது.
தீவிரவாதத்தை ஒழிச்சோம்னு சொன்னாங்க புல்வாமால தாக்குதல் நடந்தது, பணமதிப்பிழப்பு கொண்டு வந்தாங்க அதனால என்ன ஆச்சு, 500 கோடிய வாங்கிட்டுத்தான் என்னை பிஜேபி அரசு வெளிய விட்டாங்கன்னு நீரவ் மோடி சொன்னாரு அதெல்லாம் என்ன என கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மரத்துக்கும் கீழ வளர குட்டச்செடி நீ, எதற்காக குதிக்கிற? – சீமான் கேள்வி#Sunnews | #Seeman pic.twitter.com/nFTXflnkwo
— Sun News (@sunnewstamil) June 2, 2022