Published
10 months agoon
முன்னாள் முதல்வரும் இந்நாள் எதிர்க்கட்சித்தலைவருமான முதல்வர் எடப்பாடி, மாநிலங்களவை தேர்தலில் முதுகுளத்தூரை அதிமுக நிர்வாகி தர்மர் போட்டியிடுவதையும், விழுப்புரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் போட்டியிடுவதை அறிவித்தார்.
இதற்கு காரணமான பாரதிய ஜனதா முக்கிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி, தற்போது ஸ்டாலினின் ஆட்சியில் கஞ்சா விற்பனை அதிக அளவு நடந்து வருவதாகவும், ஆபரேஷன் 2.0 என்ற பெயரில் கஞ்சா கடத்துபவர்களை பிடித்ததாக சொன்னது என்ன ஆனது என வினவி இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக ஆட்சியில் தான் குட்கா, கஞ்சா புழக்கம் அதிக அளவில் இருந்தது. திமுக ஆட்சி அமைந்த பின் கஞ்சா விற்பனை செய்ப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் தங்கு தடையின்றி குட்கா புழக்கத்தில் இருந்தது.
அதிமுக ஆட்சியில் சென்னை மாநகரத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களை பட்டியலிட்டால் அதற்கு நேரம் போதாது. கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களின் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்ட விரக்தியில் எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு மாறான தகவல்களை தருகிறார் என அவருக்கு பதிலளித்துள்ளார் தங்கம் தென்னரசு.
ஸ்டாலின் இந்திய நாட்டின் முன்னோடி என சொல்வது வெட்ககேடானது- முன்னாள் முதல்வர் எடப்பாடி
பிரபல நெறியாளர் செந்தில்வேல் மீது முன்னாள் முதல்வர் எடப்பாடி புகார்
சுற்றுலாவுக்காகத்தான் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார்- மக்களுக்காக அல்ல- முன்னாள் முதல்வர்
அரசு பேருந்து ஓட்டுநர் கை வெட்டப்பட்ட சம்பவம்- ஆளும் அரசு மீது எடப்பாடி புகார்
வானிலை அறிக்கையை பொருட்படுத்தவில்லை- திமுக மீது எடப்பாடி குற்றச்சாட்டு
முதலமைச்சர் தாயை பழித்து பேசிய விவகாரம்- பிரதமர் மோடி கண்டனம்