cinema news
என்னது இதெல்லாம் இவங்க பாடிய பாடல்களா?…சோ ஸ்வீட் வாய்ஸ்… கேட்டுகிட்டே இருக்கலாம் தானே இந்த பாடல்களயெல்லாம்….
சினிமா படத்தில் கதாநாயகன், கதாநாயகி, கதை, திரைக்கதை, வசனம் நகைச்சுவை எல்லாம் எப்படி முக்கியமோ அது போல தான் பாடல்கள். பாடல்கள் படத்தினுடைய வெற்றிக்கு மிகப்பெரிய அஸ்திவாரமானதாக அமைந்துமுள்ளது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாடல்களைப் பாடும்பாடகர், பாடகிகளும் இதல் அதிக கவனம் பெறுவர்.
நிறைய பாடல்களைப் பாடி ரசிகர்களினுடைய எண்ணங்களில் தங்களது பெயரை நீங்காமல் பதித்துக் கொண்ட பாடக, பாடகிகள் ஏராளமிருக்க, மதுஸ்ரீயை யாரும் மறந்திருக்க முடியாது.
வெளிவந்த நேரத்தில் கேட்டதும் சொக்கி நிற்க வைத்து, இன்றும் எங்கு கேட்டாலும் அதனையே கூர்ந்து கவனிக்க வைக்கும் இந்த பாடல்களை எல்லாம் பாடியது சாட்சாத் மதுஸ்ரீயே’.
எச்.ஜே.சூர்யா, நிலா நடித்து வெளிவந்த “அ..ஆ” படத்தில் வரும் ‘மயிலிறகே’ பாடல் இவரது இனிக்கும் குரலில் வந்தது தான். அதே போல ஆர்யா, திரிஷா நடித்த “சர்வம்” பட ‘சிறகுகள் வந்ததோ எங்கோ செல்ல’ டுயட் பாடலை தெறிக்க விட்டதும் மதுஸ்ரீ தான்.
சிம்பு, வேதிகாவின் “காளை” படத்தில் கதாநாயகி ‘எப்ப நீ என்ன பார்ப்ப’ என ஏங்கி பாடும் பாடலின் குரலும் மதுஸ்ரீயினுடயதே. யுவன் ஷங்கர் ராஜா இசையில் “மங்காத்தா” படத்தில் திரிஷா சோகமாக பாடும் ‘என் நண்பனே என்னை’ பாடலும், சமீபத்தில் வெளியாகிய சிம்புவின் “வெந்து தனிந்தது காடு” படத்தில் சூப்பர் ஹிட்டான ‘மல்லிப்பூ வெச்சி வாடுதே , எப்ப வரப்போற’ பாடலின் குரலுக்கு சொந்தக்காரர் மதுஸ்ரீ தான்.
சாந்தனு பாக்யராஜ் நடித்து வெளியான “சக்கரக்கட்டி” படத்தில் வரும் ‘மருதானி மருதானி’ என கையில் வைத்ததும் ஒட்டிக்கொள்ளும் மருதானியை போல கேட்டதுமே மனதிற்குள் ஒட்டிக்கொண்ட இந்த பாடலையும் பாடியவர் மதுஸ்ரீ.