தர்ஷன் போனதுக்கு நீதான் காரணம் – மீண்டும் பிக்பாஸ் வீட்டில் வனிதா (வீடியோ)

180
vanitha

பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ள வனிதா விஜயகுமார் ஷெரினிடம் சண்டை போடும் வீடியோ வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் தர்ஷனை காதலிப்பது போல் ஷெரின் நடந்து கொண்டார். தர்ஷனின் வெற்றியை தடுக்கும் பொருட்டு ஷெரின் இப்படி திட்டமிட்டு நடந்து கொள்கிறார் என வனிதா ஷெரினுடன் மோதலில் ஈடுபட்டார். தர்ஷனையும் எச்சரித்தார். ஆனால், தர்ஷன் வனிதாவை நம்பவில்லை. ஷெரினையே நம்பினார்.

ஆனால், தற்போது ஷெரின் உள்ளே இருக்க தர்ஷன் வெளியேறிவிட்டது வனிதா கூறியது சரியோ என்கிற எண்ணம் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், சிறப்பு விருந்தினர்களாக வனிதா, கஸ்தூரி, சாக்‌ஷி ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதையடுத்து, தர்ஷன் வெளியேறியதற்கு நீ தான் காரணம் என ஷெரினிடம் வனிதா கூற அங்கு மோதல் எழுகிறது. வனிதாவின் கருத்தை சாக்‌ஷியும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பான புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  என்னை காறி துப்புகிறார்கள்... லாஸ்லியாவுக்கு டோஸ் விட்ட தந்தை - புரமோ வீடியோ