Entertainment
காதலன் மீது பிக்பாஸ் ஜூலி புகார்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பிரபலமானவர் ஜூலி. இவரை பலரும் வீர தமிழச்சி என்று கூட புகழ்ந்தனர். ஒரு கட்டத்தில் இவருக்கு சினிமா, டிவி ஆன்கரிங் வாய்ப்புகள் எல்லாம் வந்தது. விரைவில் புகழ்பெற்ற இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் அதன் மூலம் மேலும் புகழ்பெற்றார்.
இந்த நிலையில்
இவர் அமைந்த கரை பகுதியை சேர்ந்த அழகுக்கலைஞர் மணீஷ் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து காதலனுக்கு இருசக்கர வாகனம், தங்க நகை உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்ததாகவும், தற்போது தன்னைத் திருமணம் செய்ய மறுப்பதாகவும் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் காதலன் மணீஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
