Connect with us

கோபமெல்லாம் இல்லீங்க…நா போனது அதுக்காகத்தான்…மணி படத்தில் மீண்டும் இணைந்த உலக நாயகன்…

kamal

cinema news

கோபமெல்லாம் இல்லீங்க…நா போனது அதுக்காகத்தான்…மணி படத்தில் மீண்டும் இணைந்த உலக நாயகன்…

“விக்ரம்” படத்தின் விஸ்வரூப வெற்றிக்கு பிறகு கமலின் சினிமா வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சி என வேறு பாதையில் பிஸியாக இருந்த கமல் படங்களில் மீண்டும் உற்சாகமாக நடித்து வருகிறார்.

“இந்தியன்”, ஷங்கர் இயக்கத்தில் திரை உலகை திருப்பிபோட்ட படத்தினுடைய இரண்டாம் பாகம் வெளிவர தயாராக இருந்து கொண்டிருக்கிறது. “நாயகன்” போல மிகப்பெரிய காவியத்தை மீண்டும் எழுதுவார் உலக நாயகன் என அவரது ரசிகர்கள் வெறித்தனமாக காத்து நிற்கின்றனர்.

kamal

kamal

25 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்தினத்தோடு கை கோர்த்தூள்ளார் கமல். “தக்-லைஃப்” படத்தின் மூலம். வேலு நாயக்கர் மாதிரியே இந்த படத்திலும் கமலை என்றும் மறவாத வண்ணம் இயக்குவார் என எதிர்பார்ப்பும் மணிரத்தினத்தின் மீது குவிந்துள்ளது.

துல்கர் சல்மான், ஜெயம் ரவி இவர்களும் படத்தில் நடிக்கிறார்கள் என ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஜெயம் ரவி வெளியேற மெதுவாக அந்த இடத்தை நிரப்பினார் சிம்பு. படப்பிடிப்பு வெகு வேகமாக நடந்து வருகிறது. திடீரென வெளியான ஒரு செய்தியால் கலங்கிப்போனது கோடம்பாக்கம்.

மணிரத்தினத்திற்கும், கமலுக்கும் ஏதோ லடாய் எனவும் அதனால் ஷூட்டிங் செல்வதை கமல் நிறுத்திவிட்டார் என வாயில் வந்த வதந்திகலெல்லாம்  சுற்றி வந்தது தமிழ் திரை உலகை கடந்த சில நாட்களாக. ஆனால் கமல் மீண்டும் படக்குழுவோடு இணைந்து நடிப்பில் இறங்கிவிட்டதாக வந்த தகவலால் மகிழ்வடைந்தனர் கமல் விசிறிகள்.

கமல் சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டது “தக்-லைஃப்” படத்திற்கு பாட்டு எழுத என்கின்ற இனிப்பான செய்தி நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. நடிகராக மட்டும் படத்தில் இல்லாமல்,  மீண்டும் பாடலாசிரியராக அவதாரம் எடுத்துள்ளார் தசாவதார நாயகன்.

More in cinema news

To Top