தீபாவளி பண்டிகைக்கு 10,940 சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு

533
vijaya baskar

தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகை நாட்களில் சென்னையிலிருந்து வெளியூர் செல்வதற்காக 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆயூத பூஜைக்கு 4 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.. தீபாவளி பண்டிகையின் போது 24ம் தேதியிலிருந்து 26ம் தேதிவரை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்பட 5 இடங்களிலிருந்து சுமார் 10,940 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், தீபாவளி முடிந்து சென்னை திரும்பி வருவதற்காக சுமார் 4,627 பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானிட்டோரியம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், மாதவரம் உட்பட 30 இடங்களில் முன்பதிவு மையங்கள் திறக்கப்படவுள்ளது. அந்த மையங்களில் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அவர் கூறினார். அதோடு, www.tnstc.com, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகிய இணைய தளங்களில் அரசு பேருந்துக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

பாருங்க:  அதிமுக பாதி அழிந்துவிட்டது.. விரைவில் உண்மைகள் வெளியே வரும் - புகழேந்தி பேட்டி