cinema news
சுட்ட பழத்தையே சுட்டுட்டாய்ங்களே…இப்பிடி ஆகிப்போச்சே…தவறை ஒத்துக்கொண்ட சுந்தர்.சி?…
“அருணாச்சலம்”, “உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி” போன்ற மெஹா ஹிட் படங்களை கொடுத்தவர் சுந்தர்.சி. தற்பொழுது “ஹாரர்” படங்களில் அதிகமான கவனம் காட்டி வருகிறார். “அரண்மனை” படத்தை எடுத்து, அதனை நான்கு பாகங்கள் வரை கொண்டு சென்று ரசிகர்களுக்கு சிரிப்பு கலந்த பயத்தினை கொடுத்து வருகிறார்.
‘காப்பிரைட்ஸ்’ வாங்காமலேயே இவரது படங்களை தெலுங்கில் அப்படியே ரீ-மேக் செய்து காப்பி அடித்து வெளியிட்டார்களாம். இதனால் கோபமடைந்த சுந்தர்.சி, அவர்களை எப்படியாவது பழிவாங்கியே தீர வேண்டும் என நினைத்தாராம். நான்கு படங்களை பார்த்து அதிலிருந்து சில காட்சிகளை சுட்டே “வின்னர்” படத்தை எடுத்தாராம்.
படத்தில் நாயகி ‘கிரண்’ நாயகன் ‘பிரசாந்தை’ பழிவாங்குவதற்காக அடி வாங்க வைப்பது போல ஒரு காட்சி இருந்திருக்கும். அந்த நேரத்தில் வடிவேலு உள்ளே புகுந்து ‘இதோ வந்துட்டேன்னு’ வந்து பிரசாந்திற்கு கிரண் விரித்த வலையில் இவர் விழுந்து அடி வாங்கி கொள்வார்.
தெலுங்கு பட காட்சியின் அப்பட்டமான காப்பி தான் இது என சுந்தர்.சி.யே சொல்லியிருக்கிறார். அதோடு தெலுங்கு சினிமாக்காரர்களை பழிவாங்க போட்டன் திட்டம் பலிக்கவில்லையாம். இதே காட்சியை வேறு ஒரு படத்தில் வைத்து சுந்தர்.சி.க்கே பல்பு கொடுத்து விட்டார்களாம்.
தெலுங்கிலிருந்து தான் சுட்டு கொண்டு வந்த கதை என்னும் பழத்தை மீண்டும் சுட்டு தெலுங்கு படத்திலேயே வைத்து சுட்ட பழத்தையே சுட்டு விட்டார்களாம் தெலுங்கர்கள்.
அவர் எடுத்த ஆயுதம் அவருக்கே திரும்பியதை நினைத்து வேதனை அடைந்தாராம் சுந்தர்.சி. அதோடு மட்டுமல்லாமல் தான் செய்தது தவறுதான் என ஒத்துக்கொண்டுமுள்ளார்.