cinema news
சோனமுத்தா போச்சா?…அடுத்த ரவுண்டு இங்கதானா இனி?…ஐ ஆம் வைட்டிங்னு சொன்ன வடிவேலு!…
‘மீம்ஸ்’களில் மட்டுமே பார்க்க முடியுது, என்ன செய்றது என ஏங்கித்தவித்து கொண்டிருந்தனர் வடிவேலுவின் ரசிகர்கள். தமிழ் சினிமா கண்டெடுத்த காமெடியன்களில் இவர்தான் சிறந்தவர் என சொல்லும், அளவில் அடேங்கப்பா எத்தனை ஹிட்டுகள் தான்.
அடம் பிடித்து அழும் குழந்தைகளுக்கு வடிவேலுவின் படத்தை காட்டினாலே அவர்கள் சாந்தமாகி சகஜமாக மாறி விடுவார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் அன்பை பெற்று விருப்ப கலைஞனாக வலம் வந்தார் “வைகைப்புயல்” வடிவேலு.
“மாமன்னன்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கிடைக்க, ஆஹா அடுத்த ரவுண்டு நிச்சயம் இருக்கு , காமெடியில கலக்கிவிடலாம் என காத்திருந்தார் வடிவேலு. ஆனால் அவரிடம் வந்து கதை சொன்னவர்கள் எல்லாம் குணச்சித்திர வேடங்களை மட்டுமே பிரதானபடுத்தி சொன்னதை கேட்டு ‘சோன முத்தா போச்சா’ என அவரது காமெடி டயலாகை அவரையே மீண்டும் சொல்ல வைத்துவிட்டது விதி.
இப்படி எத்தனை நாள் தான் சும்மா இருக்குறதுன்னு சிந்திச்ச வடிவேலு இப்ப ஒரு புது ரூட்ல களமிறங்கப்போறாராம். ஆனா அது வெள்ளித்திரையில் கிடையாதாம், சின்னத்திரையிலாம். இவரும் மெகா சீரியல்ல நடிக்கப்போறாரான்னு அதிர்ச்சி அடைய கூடாது ரசிகர்கள். அப்படி என்ன திட்டம் தான் போட்டுருக்கிறார் வடிவேலு என சொல்லியுள்ளார் “வலைப்பேச்சு’அந்தணன்.
என்னடா இது ஒரு டைப்பா இருக்கே என நினைப்பது போலத்தான் பிரபல தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று அதனை நடத்தப்போகிறாராம். சம்பள பேச்சு வார்த்தை மட்டும் தான் பேச வேண்டிய பாக்கி. மீது உள்ள அனைத்தும் பேசி முடிக்கப்பட்டு விட்டது என்ற தகவலையும் சேர்த்து சொல்லியுள்ளார் அந்தணன். காமெடியில கலக்கியவர் இனி கையில் கரண்டியோடு கலக்க காத்திருக்கிறார்.