இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அமீர். “நந்தா” படத்தில் பணியாற்றி இருந்த போதும் இவரது பெயர் சில காரணங்களால் வெளியிடப்படவே இல்லையாம்.
இயக்குனர் ஆன அமீர் “பருத்திவீரன்” என ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டரை கொடுத்துள்ளார் தமிழ் சினிமாவுக்கு. கார்த்தி, பிரியாமணியின் வாழ்க்கை முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம் என்கின்ற அளவுக்கு வெற்றியை கண்டது. பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது இந்த படத்தின் மூலமே.
வெளிநாட்டில் படித்திக்கொண்டிருந்த கார்த்தியின் தோற்றத்தை முழுவதுமாக மாற்றி அவரை கிராமத்து ஆசாமியாகவே ஆளை அடியோடு மாற்றி நடிக்க வைத்திருந்தார் அமீர்.
“ராம்”, “மௌனம் பேசியதே” படங்களில் அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சசிகுமார். “பருத்தி வீரன்” படத்தில் பணிபுரிய சசிகுமாரை அழைத்த போது தான் ஒரு கதையை தயாரித்திருப்பதாகவும், அதை இயக்கவுள்ளாதாகவும் அமிரிடம் சொல்லியிருக்கிறார்.
ஆரம்பத்தில் அமீர் தயாரிப்பதாகத்தான் இருந்ததாம். அதோடு பாக்யராஜின் மகன் சாந்தனு தான் நடிப்பதாகவும் இருந்ததாம்.

ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது.அந்த இடத்தை ஜெய் நிரப்பினாராம். இப்படி மாற்றங்களை கண்டு வெளிவந்த படம் தான் “சுப்ரமணியபுரம்”.
ஆனால் சசிகுமார் படத்தில் நடித்தது கடைசி வரை தனக்கு தெரியாது என சொல்லி இருந்தார் அமீர். தனியாக படம் எடுக்க போகிறேன் என தன்னிடம் சொன்ன சசிகுமார் அவர் நடித்ததை ஏன் மறைத்தார் என்பது தெரியவில்லை தெரியவில்லையாம் அமீருக்கே.
இந்த படத்திற்கு பெரிய இயக்குனர் சசிகுமாரை விட நடிகர் சசிகுமாராகவே பார்க்கப்பட்டார். “நாடோடிகள்”, சுந்தர பாண்டியன்”, “அயோத்யா” என கதாநாயகனாக வெற்றி நடை போட்டு வருகிறார்.