தர்ஷன் வெளியேற்றப்படடதற்கு தான்தான் காரணம் என வனிதா கூறிய புகாரில் மனமுடைந்த ஷெரின் கதறி அழும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ள வனிதா தர்ஷன் வெளியானதற்கு நீயே காரணமென ஷெரினை புகார் கூறினார். நீ காதல் கடிதம் எழுதியது, தர்ஷனுடன் நெருங்கி பழகியது.. இப்படி பல காரணங்களை அவர் அடுக்கினார். இதனால் கோவத்தில் அங்கிருந்து ஷெரின் வெளியேறும் ப்ரோமோ வீடியோ முதலில் வெளியானது.
இந்நிலையில் தற்போது வெளியான வீடியோவில் கஸ்தூரியும் சாக்ஷியும்யும் ஷெரினை சமாதானம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அப்போது ‘நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை’ என்று ஷெரின் கதறி அழும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.
#Day101 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. https://t.co/Ii6u5ojpF5#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) October 2, 2019