Entertainment
நாசா மூலம் விண்ணில் ஒலிக்க உள்ள இளையராஜா பாடல்
70களின் இறுதியில் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்து பல சாதனைகளை செய்தவர் .
சிம்பொனி இசையமைத்தது முதல் பல சாதனைகளை செய்து, ஏராளமான ரசிகர்களுக்கு இசை விருந்து இன்றும் படைத்து வருபவர். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்ட இளையராஜாவுக்கு கிடைத்த கெளரவங்கள் அதிகம்.
அந்த வகையில் ஒரு புதிய கெளரவமாக நாசா உதவியுடன் விண்ணில் ஏவப்பட உள்ள உலகின் எடை குறைவான சேட்லைட் மூலம் இசைஞானி இளையராஜாவின் பாடலை விண்வெளியில் ஒலிக்க விட இருக்கின்றனர்.
இந்த சேட்லைட்டை தயாரிக்கும் குழு இளையராஜாவிடம் பேசி ஒப்புதல் வாங்கி ஒரு பாடலை வாங்கி சேட்டிலைட்டுடன் இணைத்து அனுப்பி விண்வெளியில் ஒலிக்க விட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
